1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 10 டிசம்பர் 2024 (21:32 IST)

எல்லை தாண்டி மீன்பிடித்த 78 மீனவர்கள் கைது.. இந்திய கடலோர காவல் படை அதிரடி..!

இந்திய எல்லையில் மீன் பிடித்த 78 வங்கதேச மீனவர்கள், இந்திய கடலோர காவல் படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் கைதான அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கடல் பகுதியில் வங்கதேச மற்றும் பாகிஸ்தான் மீனவர்கள் எல்லை தாண்டி கடல் பிடித்த நிலையில் இந்திய கடலோர காவல்படை அவர்களை கைது செய்து வருகிறது.

அந்த வகையில் இந்திய கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த 78 வங்கதேச மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து 160 டன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் வந்த இரண்டு படகுகள் விசாரணைக்காக துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி எல்லை தாண்டி மீன் பிடிக்கும் அண்டை நாட்டு மீனவர்களை தடுக்க 484 கிலோமீட்டர் தொலைவுக்கு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டதாக இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.



Edited by Mahendran