புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 23 மார்ச் 2022 (13:22 IST)

701 கிமீ தொலைவுக்கு 6 வழிச்சாலை: மத்திய அரசு அறிவிப்பு!

701 கிமீ தொலைவுக்கு 6 வழிச்சாலை: மத்திய அரசு அறிவிப்பு!
701 கிலோமீட்டருக்கு ஆறு வழிச்சாலை போடப்பட உள்ளதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது. 
 
நாட்டிலேயே முதல் முறையாக மும்பை  - நாக்பூர் இடையே காட்டு விலங்குகள் செல்வதற்காக பல இடங்களில் பாலங்கள் சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டு 701 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆறு வழிச்சாலை அமைக்க மத்திய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது 
 
காட்டு விலங்குகளையும் பாதுகாப்பது சாலை வசதிகளையும் மேம்படுவது என்பதற்கு இந்த சாலை ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 9 இடங்களில் பசுமை பாலங்கள் எனப்படும் மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்றும் 17 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
நெடுஞ்சாலைகளில் காட்டு விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு உயிர் இழப்பதை தடுப்பதற்காகவே இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது