புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 23 ஜனவரி 2024 (17:24 IST)

தவறவிட்ட 70 செல்போன்கள்..! உரியவர்களிடம் ஒப்படைத்த சைபர் கிரைம்..!!

police pondy
புதுச்சேரியில் காணாமல் போன 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 70 செல்போன்களை கண்டுபிடித்த சைபர் கிரைம் போலீசார், அதனை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்

புதுச்சேரியில் கடந்த இரண்டு மாதங்களில் 250 வழக்குகள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பதிவாகி உள்ளது. இதில் தவறவிட்ட செல்போன்களின் வழக்கு தான் அதிகம். இரண்டு மாதங்களில் பெரும்பாலான செல்போன்களை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 
 
சைபர் கிராம் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் இதனை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

 
இணைய வழியில் வருகின்ற  முதலீடு, வேலைவாய்ப்பு, வரன் தேடுதல், ஒரே நாளில் 10% வருமானம், குறைந்த விலையில் பொருட்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு, பழைய பொருட்களை குறைந்த விலைக்கு தருகிறோம், உங்களுடைய கிரெடிட் கார்டில் கடன் வாங்கும் தொகையை அதிகரிக்கிறோம், செல்போன் டவர் அமைக்க இடம் வேண்டும், இலவசமாக ஆன்லைனில் டிரேடிங் செய்ய சொல்லிக் கொடுக்கிறோம் போன்ற இணைய வழியில் வருகின்ற எதையுமே நம்ப வேண்டாம் என்று பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.