திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 22 நவம்பர் 2018 (16:00 IST)

பேருந்து மோதி 7 பள்ளிக் குழந்தைகள் பலி!

மத்திய பிரதேசத மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள பிர்சிங்பூர் பகுதியில் இன்று காலையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றி வந்த வேன் மீது அவ்வழியே வேகமாக வந்த பயணிகள் பேருந்து பலமாக மோதியது. இதில் பள்ளி வேனை ஓட்டிவந்த டிரைவர்  உட்பட ஏழு குழந்தைகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களை அருகே உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
இந்த விபத்துக்கான காரணம் பற்றி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.