நடிகை சமந்தா திருமணத்தின்போது பழைய பட்டுப்புடவை உடுத்துகிறாரா?
சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது. ஜனவரி 29-ம் தேதி நாக சைதன்யா-சமந்தா இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
வரும் அக்டோபர் 6-ம் தேதி கோவாவில் நாக சைதன்யா மற்றும் சமந்தா திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளை கோலாகலமாக செய்துவருகிறார்கள். இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது இவர்களது திருமண அழைப்பிதழ் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மூன்று நாட்கள் நடக்கவிருக்கும் திருமண நிகழ்ச்சிகளில் ஒருநாள் முழுக்க சமந்தா பழைய புடவையில் தான் காட்சியளிக்கப்போகிறாராம். ஏனெனில், இந்த பழைய புடவை நாகசைதன்யாவின் பாட்டியின் பாரம்பரிய திருமண புடவையாம். இதனால் குடும்ப வழக்கப்படி அந்த சேலையை உடுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த பழைய புடவையை பல லட்ச ரூபாய் செலவில் பாலீஷ் செய்துவருகிறாராம் சமந்தா.