ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2017 (18:30 IST)

குர்மித் சிங் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள் - அதிர்ச்சியில் போலீசார்

ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறையில் உள்ள அரியானா சாமியார் குர்மித் சிங்கின் ஆசிரமத்தில், மனித எலும்புக்கூடுகள் உள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பிரபல ஆன்மீக சாமியார் ராம் ரஹிம் சிங் கடந்த 15 ஆண்டுகளுக்கு முந்தைய பாலியல் வழக்கு ஒன்றில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அரியானா மாநிலத்தில் உள்ள சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இந்த விவகாரத்தில் சாமியாரின் கார் ஓட்டுனர் கட்டாசிங், அப்ரூவராக மாறியுள்ளார். அவர் சாமியார் பற்றிய பல தகவல்களை போலீசாரிடம் கூறி வருகிறார். 
 
இந்நிலையில், சாமியாரின் ஆசிரமத்தை போலீசார் சோதனையிட சென்ற போது அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று காத்திருந்தது. அதாவது, ஒரு இடத்தில் பல மனித உடல்களை புதைத்து வைத்து, செடிகள் நட்டிருந்தனர். அந்த இடத்தில் 600 பேர் புதைக்கப்பட்டனர் என கட்டாசிங் வாக்குமூலம் அளித்துள்ளார். 
 
ஆனால், அவர்கள் யாரும் கொல்லப்படவில்லை. இந்த ஆசிரமத்தில் புதைத்தால் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பதால், அவர்களின் உறவினர்களே இங்கு புதைக்க அனுமதி கேட்டனர் எனவும், அவர்கள் அனைவரும் இயற்கையாக மரணமடைந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
 
ஆனால், சாமியாரின் பாலியல் தொல்லைக்கு ஆளான சில பெண்களும் கொலை செய்யப்பட்டு, அங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. 
 
இது தொடர்பாக புதைக்கப்பட்டவரக்ளின் தகவல்களை சேகரித்து, அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.