5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் தொடங்கியது: 4 நிறுவனங்கள் பங்கேற்பு!
5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் தொடங்கியது: 4 நிறுவனங்கள் பங்கேற்பு!
5ஜி அலைக்கற்றை ஏலம் சற்றுமுன் தொடங்கிய நிலையில் இந்த ஏலத்தில் 4 நிறுவனங்கள் கலந்து கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் தற்போது 4ஜி மட்டுமே இருந்து வரும் நிலையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை 26-ஆம் தேதிகளில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு இந்த ஏலம் தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது
இந்த ஏலத்தில் அதானியின் டேட்டா நெட்வொர்க்ஸ், ரிலையன்ஸ், ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
இந்த ஏலம் இம்மாதம் இறுதி வரை நடைபெறும் என்றும் அடுத்த மாதம் ஏலம் யாருக்கு கிடைத்துள்ளது என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.