1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (17:31 IST)

ஜியோ, வோடபோன், பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கால் முடியாததை முடித்த ஏர்டெல்!

ஜியோ நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 93.32 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. 
Airtel

 
இந்தியாவில் மொபைல் நெட்வொர்க் சேவைகளில் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் நெட்வொர்க்குகளாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. சமீபத்தில் ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் அடுத்தடுத்து தங்களது ரீசார்ஜ் ப்ளான்களின் கட்டணத்தை 20 முதல் 25% வரை உயர்த்தின.
 
இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஜியோ நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 93.32 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இத்துடன் வோடஃபோன் நிறுவனம் 3.89 லட்சம் வாடிக்கையாளர்களையும், பி.எஸ்.என்.எல் 3.77 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளன.
 
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஏர்டெல் மட்டும் புதிதாக 7.14 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை கடந்த ஜனவரி மாதம் பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.