புதன், 12 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya
Last Updated : புதன், 20 ஜூலை 2016 (16:01 IST)

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் 59 கிலோ தங்கம் மாயம்

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் 59 கிலோ தங்கம் மாயம்

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகாவுக்கு சொந்தமான பெட்டகத்தில் இருந்து 59 கிலோ தங்கம் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


புதுடெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் மூலம் கடத்தி வரப்படும் தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அதிக பாதுகாப்பு நிறைந்த பெட்டகத்தில் சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த அறையில்  நடந்த திடீர் சோதனையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 83 கிலோ தங்கக் கட்டிகள் திருடப்பட்டு, அதற்கு பதில் தங்கத்தைப் போன்று மின்னும் போலியான மஞ்சள் நிற உலோகக் கட்டிகள் வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இந்தநிலையில், அந்த பெட்டகத்தில் மீண்டும் சோதனை நடத்தியபோது சுமார் 59 கிலோ எடையுள்ள தங்கம் மீண்டும் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து டெல்லி விமான நிலைய காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்