தொடர்புடைய செய்திகள்
- ஜி20 மாநாட்டின் இரவு விருந்து: முக ஸ்டாலின், மம்தா பானர்ஜி பங்கேற்பு..!
- ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறதா? முன்னாள் ஜனாதிபதி தலைமையில் குழு..!
- ஜி20 மாநாடு: டெல்லி அரசு குரங்குகளுக்கு கட்-அவுட் வைப்பது ஏன்?
- ஜி20 மாநாட்டை புறக்கணித்த ரஷிய, சீன நாட்டு அதிபர்கள்?
- டெல்லியில் ஜி20 மாநாடு! 1000 விமானங்கள் ரத்தா? – டெல்லி விமான நிலையம் விளக்கம்!
ஜனாதிபதியின் இரவு விருந்து.. அதானி, அம்பானி உள்பட 500 தொழிலதிபர்களுக்கு அழைப்பு..!
டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற இருப்பதை அடுத்து ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் இரவு விருந்து வைக்க உள்ளார். இந்த விருந்தில் பங்கேற்க 500 தொழிலதிபர்களுக்கு மத்திய அரசு அழைப்பு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
தொழில் அதிபர்கள் கௌதம் அதானி, முகேஷ் அம்பானி, டாட்டா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், குமார் மங்கலம் பிர்லா, ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டல், மகேந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகேந்திரா உள்ளிட்ட 500 தொழிலதிபர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் முதலமைச்சர்கள் மற்றும் முன்னாள் பிரதமர்களுக்கும் அழைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த அழைப்பை ஏற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாளை டெல்லி செல்ல உள்ளார்.
Edited by Mahendran
