1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (11:21 IST)

உடல் உறுப்பு தானம் செய்தால் 42 நாள் சிறப்பு விடுமுறை: அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

மத்திய அரசு ஊழியர்கள் உடல் உறுப்பு தானம் செய்தால் 42 நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் உடல் உறுப்பு தானம் செய்தால் அவர்களுக்கு ஓய்வு தேவைப்படும் என்பதால் அவர்களுக்கு 42 நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் உடல் உறுப்பு தானம் செய்யும் வழக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது உடல் உறுப்பு தானம் செய்தால் 30 நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இனி அதிகபட்சமாக 42 நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உடல் உறுப்பு தானத்தை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் சம்பந்தப்பட்ட துறை தலைவரின் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

Edited by Mahendran