முதல்வரின் காருக்கு 400 ரூபாய் அபராதம்!! என்னங்க மிஸ்டர் இப்படி செஞ்சுட்டீங்களே...
போக்குவரத்து விதிகளை மீறியதால் கர்நாடக முதலமைச்சரின் காருக்கு 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை கண்டுபிடிக்க ஆங்காங்கே நவீன கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. அப்படி போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட வாகன உரிமையாளரின் வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும்.
அப்படி சமீபத்தில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தனது சொந்த காரில் வெளியே சென்றுள்ளார். காரை டிரைவர் அதிவேகமாக ஓட்டியதாக தெரிகிறது. இந்த காட்சியானது ஆங்காங்கே பொறுத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனைப் பார்த்த அதிகாரிகள், இது முதல்வரின் கார் என தெரியாமல் போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி 400 ரூபாய் அபராதத்தை கட்ட சொல்லி அவரின் வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அந்த நோட்டீஸிற்கு முதல்வர் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் வரவில்லை.
போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது என சொல்லிவிட்டு முதல்வரின் காரே போக்குவரத்து விதிகளை மீறியது கர்நாடகாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.