மார்ச் 31க்கு பின் பழைய ரூபாய் நோட்டு வைத்திருந்தால் 4 ஆண்டுகள் சிறை
மார்ச் 31ஆம் தேதி பிற்கு பழைய ரூபாய் நோட்டு வைத்திருந்தால், மொத்த தொகையில் இருந்து 5 மடங்கு அபராதமும், அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லது என்று அறிவித்த மத்திய அரசு புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. அதைத்தொடந்து பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் இம்மாதம் 30ஆம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. அத்ற்கு பல்வேறு விதிமுறைகளும் விதிக்கப்பட்டது.
டிசம்பர் 30ஆம் தேதி பின் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிவர்வ் வங்கிக்கு சென்று அங்கு மாற்றிக் கொள்ளலாம் என்றும், அதற்கு மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு பிக்ன் பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பழைய 500 மற்றும் 1000 நோட்டுகளை அதிக அளவில் வைத்திருப்பது குற்றமாகவும், வைத்திருப்பவர்கள் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்து இருப்பவர்களாகவும் கருதப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கையை அமல்படுத்த அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அரசு அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். மார்ச் 31ஆம் தேதிக்கு பிறகு ஒருவர் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால், அவர் வைத்திருக்கு தொகையில் இருந்து 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும்.
அதோடு அதிக அளவில் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வர உள்ளது.