1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendnran
Last Modified: புதன், 22 நவம்பர் 2023 (13:07 IST)

தமிழ்நாட்டில் இருந்து வடமாநிலங்கள் செல்லும் 38 ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

Train
தமிழ்நாட்டில் இருந்து வடமாநிலங்கள் செல்லும் 38 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் மதுரா  வழியாகச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 
 
குறிப்பாக சென்னை, கோவை, மதுரை மற்றும் கேரளாவில் இருந்து செல்லும் 38 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படவுள்ளன. அதன் முழு விவரங்கள் பின்வருமாறு:
 
சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி செல்லும் துரந்தோ விரைவு ரயில் (எண்:12269) ஜன. 15 முதல் பிப். 3-ம் தேதி வரையும், ராஜ்தானி விரைவு ரயில் ஜன.31 முதல் பிப்.4-ஆம் தேதி வரையும், கரீப் ரத் விரைவு ரயில் ஜன. 16 முதல் பிப்.3 வரையும் ரத்து.
 
புதுச்சேரியில் இருந்து டெல்லிக்கு செல்லும் விரைவு ரயில் ஜன.21 முதல் பிப்.7 வரையும், மதுரையில் இருந்து செல்லும் சம்பர்க் கிராந்தி விரைவு ரயில் ஜன.14 முதல் பிப்.6-ம் தேதி வரையும், கோவையில் இருந்து செல்லும் கொங்கு அதிவிரைவு ரயில் ஜன.21 முதல் ஜன.31-ம் தேதி வரையிலும், கன்னியாகுமரியில் இருந்து டெல்லி செல்லும் திருக்கு விரைவு ரயில் ஜன.10 முதல் பிப்.2-ம் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது.
 
திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 22653/22654) ஜன. 13 முதல் பிப்.5-ம் தேதி வரையும், ஸ்வர்ண ஜெயந்தி அதிவிரைவு ரயில் ஜன.9 முதல் பிப்.2-ம் தேதி வரையிலும், கேரள அதிவிரைவு ரயில் ஜன.27 முதல் பிப்.5-ம் தேதி வரையும், எர்ணாகுளத்தில் இருந்து டெல்லி செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 22655/22656) ஜன.10 முதல் பிப்.2-ம் தேதி வரையும், எர்ணாகுளம் டெல்லி துரந்தோ விரைவு ரயில் ஜன.13 முதல் பிப்.6-ம் தேதி வரையும், மில்லினியம் விரைவு ரயில் ஜன.6 முதல் பிப்.6-ஆம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.
 
மதுரையில் இருந்து சண்டிகர் செல்லும் விரைவு ரயில் ஜன.10 முதல் பிப்.5-ம் தேதி வரையிலும், கொச்சுவேலியில் இருந்து அமிர்தசரஸ் செல்லும் விரைவு ரயில் ஜன.14 முதல் பிப்.7-ஆம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.
 
அதேபோல் ஸ்ரீவைஷ்ணவ தேவி கேந்த்ராவுக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் அந்தமான் விரைவு ரயில் ஜன.10 முதல் பிப்.6-ம் தேதி வரையும், கன்னியாகுமரியில் இருந்து செல்லும் ஹிம்சாகர் விரைவு ரயில் ரயில் ஜன.12 முதல் பிப்.5-ம் தேதி வரையும், திருநெல்வேலியில் இருந்து செல்லும் ரயில் (எண்: 16787) ஜன.8 முதல் பிப்.1-ம் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது.
 
கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து ரிஷிகேஷ் செல்லும் அதிவிரைவு ரயில் ஜன.12 முதல் பிப்.5-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.  சென்னை- புதுடெல்லி தமிழ்நாடு விரைவு ரயில், கொச்சுவேலி சம்பர்க் கிராந்தி விரைவு ரயில், மங்களா லட்சத்தீவு விரைவு ரயில் உள்ளிட்டவை ஆக்ராவிலிருந்து மாற்றுப்பாதையில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendnran