வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 22 நவம்பர் 2023 (09:35 IST)

மழை நிலவரத்துக்கு ஏற்ப தலைமை ஆசிரியர்களே விடுமுறை அறிவிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு..!

மழை பெய்யும் நிலவரத்திற்கு ஏற்ப அந்தந்த பள்ளி ஆசிரியர்களே விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

மழைக்காலங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பை கலெக்டர் மட்டுமே தெரிவித்து வரும் நிலையில் மழையின் அளவைப் பொறுத்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களே விடுமுறை தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என்றும் மழைக்காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நாகை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இனிவரும் நாட்களில் மழையின் அளவை பொறுத்து அந்தந்த பள்ளி ஆசிரியர்களே பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva