1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 2 ஜூலை 2017 (14:30 IST)

பரப்பன அக்ரஹாரா சிறையில் 36 பேருக்கு எயிட்ஸ் பாதிப்பு: மீறப்படும் விதிகள்!

பரப்பன அக்ரஹாரா சிறையில் 36 பேருக்கு எயிட்ஸ் பாதிப்பு: மீறப்படும் விதிகள்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து அந்த சிறையும் பிரபலமடைந்துவிட்டது.


 
 
தற்போது ஜெயலலிதா மறைந்துவிட்டார். ஆனால் அவரது தோழி சசிகலா மீண்டும் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த சிறையின் பெயர் அடிக்கடி ஊடகங்களில் அடிப்பட்டு பிரபலமைடந்துள்ளது.
 
இந்நிலையில் இந்த சிறையில் விதிகள் மீறப்படுகிறது என்ற தகவல் வந்துள்ளது. விதிமுறைகளின் படி 2300 கைதிகளை தான் இந்த சிறையில் அடைக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால் தற்போது இந்த சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 4400.
 
அதுமட்டுமல்லாமல் இந்த சிறையில் உள்ள கைதிகளிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் பல பகீர் தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த மருத்துவ பரிசோதனையின் முடிவில் சிறை கைதிகளில் 36 பேருக்கு எயிட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
4400 சிறைக்கைதிகள் இருக்கும் இந்த சிறைக்கு வெறும் 3 மருத்துவர்களே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இங்கு பல கைதிகள் எயிட்ஸ் நோயினால் மட்டுமல்லாமல், காச நோய், வலிப்பு, இதய பிரச்சனை, நுரையீரல் பிரச்சனை என பல வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வருகின்றனர்.