வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (09:17 IST)

வாக்காளர் பட்டியலில் 3 வயது சிறுமி – அதிகாரிகள் குளறுபடி !

தெலங்கானா உள்ளாட்சித் தேர்தலுக்கான மாதிரி வாக்காளர் பட்டியலில் எல் கே ஜி படிக்கும் மாணவி ஒருவரின் பெயரும் இருந்தது குழப்பத்தை ஏற்படுத்தியது.

தெலங்கானாவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக மறுசீரமைக்கப்பட்ட மாதிரி வாக்காளர் பட்டியலை தெலங்கானா தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் அதிகாரிகளின் அலட்சியத்தால் குளறுபடி ஒன்று நடந்தது.

கரீம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். அவரின் 3 வயது மகள் நந்திதா தற்போது எல் கே ஜி படித்து வருகிறார். இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் நந்திதாவின் பெயரும் இருந்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. சிறுமியின் புகைப்படத்தோடு நந்திதா, 35 வயது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை அறிந்த குழந்தையின் தந்தை தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டார். இதையடுத்து உடனடியாக அதிகாரிகள் நந்திதாவின் பெயரை நீக்கினர்.