1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 மார்ச் 2022 (08:42 IST)

வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றவில்லை! – மீண்டும் விவசாய அமைப்புகள் போராட்டம்!

வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றபோது மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என விவசாய அமைப்புகள் மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளன.

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் மாபெரும் போராட்டத்தை நடத்தி வந்தனர். ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது. சட்டங்களை திரும்ப பெற்றபோது விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ், குறைந்த பட்ச ஆதார விலை உள்ளிட்ட சில உத்தரவாதங்களையும் மத்திய அரசு அளித்தது.

ஆனால் போராட்டத்தை கைவிட்டு மூன்று மாதங்களுக்கும் மேல் ஆகியும் மத்திய அரசு வாக்குறுதிகளை செயல்படுத்தாததால் மீண்டும் போராட்டம் நடத்த உள்ளதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 21ம் தேதி நாடு தழுவிய முழு போராட்டம் நடத்த உள்ளதாகவும், ஏப்ரல் 11 முதல் 17 வரை குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதம் அளிக்க கோரும் வாரத்தை கடைபிடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.