1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : புதன், 8 மே 2024 (13:49 IST)

25 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை.. பரபரப்பு தகவல்..!

மேற்குவங்க மாநிலத்தில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் தடை செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்வாணையம் மூலம் 25,000 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் இந்த நியமனத்தில் முறைகேடு நடந்ததாக கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றம் நியமனம் செல்லாது என்று உத்தரவிட்டது 
 
இதனை எதிர்த்து மேற்குவங்க மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில் ஆசிரியர் நியமனங்களை உயர்நீதிமன்றம் தன்னிச்சையாக ரத்து செய்துவிட்டது என்று கோரிக்கை விடுத்துள்ளது
 
இந்த மனு தலைமை நீதிபதி உள்பட 3 பேர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் இந்த விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தலைமை நீதிபதி ஆசிரியர் மற்றும் பணியாளர் நியமனத்தை ரத்து செய்த ஹைகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார்
 
 இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தொடர நீதிபதிகள் அனுமதித்து உள்ளதை அடுத்து விரைவில் சிபிஐ இந்த வழக்கு குறித்து விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran