புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (13:24 IST)

மாணவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 25 வயது ஆசிரியை கைது

ஆக்ராவில் மாணவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
ஆக்ராவில் 15 வயது மாணவனை ரூச்சி சிங்கால்(25) என்ற ஆசிரியை ஒருவர் ஆபாச வீடியோ எடுத்து அதை ஆன்லைனில் வெளியிடுவதாக கூறி மிரட்டியுள்ளார். இதனால் அந்த மாணவன் பயத்தில் வீட்டில் இருந்து பணம் மற்றும் நகையை ஆசிரியையிடம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 
 
அதில்,
 
ஒரு வருடத்திற்கு முன் கச்சேரி கேட் பகுதியில் உள்ள ரூச்சி சிங்காலின் பயிற்சி செண்டரில் சேர்ந்தேன். அங்கு ரூச்சி சிங்கால் மற்றும் அவரது சகோதரர் நித்ன் சிங்கால் ஆகியோர் எனக்கு பாடம் கற்றுக்கொடுத்து வந்தனர். பின் ரூச்சி சிங்கால் மற்றும் அவரது சகோதரி அஞ்சலி எனக்கு பழக்கமானார்கள். ஒருநாள் அவர்கள் எனக்கு குளிர்பானம் கொடுத்தனர்.
 
அதை குடித்த நான் மயக்கமடைந்தேன். அப்போது அவர்கள் என்னை ஆபாசமாக படம் மற்றும் வீடியோ எடுத்தனர். அதை ஆன்லைனில் வெளியிடுவதாக கூறி என்னை மிரட்டினர். நான் வீட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் திருடி கொடுத்தேன். அவர்கள் என்னை தொடர்ந்து கட்டாயப்படுத்தி ஆபாச படங்களை பார்க்க வைத்தனர்.
 
பாலியல் செயலில் ஈடுபட தூண்டினர். அதையும் வீடியோ எடுத்து மிரட்டினர். மீண்டும் வீட்டிலிருந்து பணம் எடுத்து வந்து கொடுத்தேன். பாட்டியின் லாக்கரியில் இருந்து விலைமதிப்பற்ற நாணயங்கள் மற்றும் உலோகங்களை எடுத்து வந்து கொடுத்தேன் என்றார்.
 
ரூச்சி சிங்கால், அவரது சகோதரி மற்றும் சகோதரன் ஆகியோர் பணக்கார மாணவர்களை இதுபோல் ஆபாச படம் எடுத்து பின்னர் அவர்களை மிரட்டி பண பறித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.