1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (13:22 IST)

2 நாள் ஆளுநர்கள் மாநாடு..! டெல்லி புறப்பட்டு சென்றார் ஆளுநர் ரவி.!!

RN Ravi
டெல்லியில் 2 நாள் நடைபெற ள்ள ஆளுநர்கள்  மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
 
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் ஆகஸ்ட் 2,3 ஆகிய இரண்டு நாட்கள் மாநில ஆளுநர்கள் மாநாடு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது. 

இந்த மாநாட்டில் அனைத்து மாநில ஆளுநர்களும் பங்கேற்பார்கள். மூன்று குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துதல், உயர் கல்வியில் சீர்திருத்தங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம், பழங்குடியினர் பகுதிகள், முன்னோடி மாவட்டங்கள், வட்டங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துதல் உள்ளிட்டவை குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. 

 
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். தமிழக ஆளுநரின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைந்த நிலையில், அவருக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.