இரண்டு டோஸ் செலுத்தினால் 98 % பாதுகாப்பு
ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மரணத்தில் இருந்து 92% பாதுகாப்பு என தகவல்.
ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மரணத்தில் இருந்து 92% பாதுகாப்பும், இரண்டு டோஸ் செலுத்திக்கொண்டால் 98% பாதுகாப்பும் கிடைக்கும் என்று சண்டிகரில் உள்ள பிஜிஐஎம்இஆர் (PGIMER) மருத்துவக் கல்லூரி ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இது ஓர் இந்திய அரசு ஆய்வு நிறுவனம் ஆகும்.
இந்தியாவில் இதுவரை நான்கு தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் எந்தத் தடுப்பூசியை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது தெரிவிக்கப்படவியில்லை.