விமானத்தில் சென்ற 11 மாத குழந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு... நடுவானில் பரிதாபமாக மரணம்..!
கேரளாவில் உள்ள கொச்சி என்ற நகரை நோக்கி வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணம் செய்த 11 மாத குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கத்தாரிலிருந்து கொச்சி நோக்கி நேற்று வந்து கொண்டிருந்த விமானத்தில் ஒரு பெண் தனது 11 மாத குழந்தையுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த குழந்தைக்கு திடீரென உடல் நல குறைபாடு ஏற்பட்டது. இதனை அடுத்து கொச்சி விமான நிலையத்திற்கு விமான அதிகாரிகள் தகவல் அளித்த நிலையில் ஆம்புலன்ஸ் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விமானம் தரையிறங்கியதும் மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்த நிலையில் அந்த குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என அறிவித்தது தாய்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விமானத்தில் திடீரென குழந்தை உயிரிழந்ததால், காவல் துறையினர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குழந்தையின் தாய்க்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva