ஆப்கனில் இருந்து டெல்லி வந்த 16 பேருக்குக் கொரோனா! அதிர்ச்சி தகவல்!
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்த 78 பேரில் 16 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வரும் ஒரு மாதத்துக்குள்ளாகவே தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றி விட்டனர். இப்போது தாலிபன்கள் ஆட்சியில் நம்பிக்கை இல்லாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அமெரிக்க வீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.
ஆப்கனில் வேலை செய்து வந்த இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று காபூலில் இருந்து 78 பேரோடு ஒரு விமானம் டெல்லிக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்தவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொண்டதில் 16 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.