செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2020 (10:51 IST)

கொரோனா வைரஸ்: இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களும் குணமானவர்களும்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1965 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் இதுவரை 8 லட்சம் பேருக்கு மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 47,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு 200 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் நேற்று வரை 1834 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 1965 ஆக உயர்ந்துள்ளது.  நாளுக்கு நாள் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனாலும் ஆறுதல் அளிக்கும் விஷயமாக இதுவரை சிகிச்சை பெற்று வந்தவர்களில் 151 பேர் வரை குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு 50 ஐ தாண்டியுள்ளது.

அதே போல மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் கம்மியாகவே இருப்பதாக சொல்லப்படுகிறது.