12 வயது சிறுமி வன்கொடுமை; உதவி கேட்டு நிர்வாணமாக சென்ற சோகம்! – உஜ்ஜையினியை உலுக்கிய சம்பவம்!
மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு உதவி கேட்டு பல கிலோ மீட்டர் நடந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜயினி பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் சமீபத்தில் மர்ம நபரால் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிகிறது. வன்கொடுமை செய்யப்பட்டு அரை நிர்வாணமாக சாலையில் விடபட்ட அந்த சிறுமி உதவிக்கேட்டு உஜ்ஜயினி தெருக்களில் சென்றுள்ளார். ஆனால் அவருக்கு யாரும் உதவ முன்வராத நிலையில் சுமார் 8 கி.மீ உடலில் ரத்த காயங்களுடனும், அரை நிர்வாணமாகவும் நடந்து சென்றுள்ளார்.
இந்த கோர சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அந்த சிறுமிக்கு உதவ மனமில்லாத அளவு மனிதத்தன்மை அற்று போய்விட்டதா என சமூக வலைதளங்களில் பலரும் வேதனைகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். முதற்கட்டமாக சந்தேகத்தின் அடிப்படையில் ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.
Edit by Prasanth.K