வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 22 ஜனவரி 2024 (07:50 IST)

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் சரண் அடைந்தார்களா?

Bilkis Bano
பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் 11 பேரும் குஜராத், கோத்ரா சிறையில் சரணடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 11 பேரும்  குஜராத் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவரது குடும்பத்தினர்களை கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வழக்கில்  மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.
 
இந்த தீர்ப்பை எதிர்த்து, குற்றவாளிகள் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால், அவர்களின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, குற்றவாளிகள் குஜராத் அரசிடம் கருணை மனு அளித்தனர். அந்த மனுவை குஜராத் அரசு ஏற்றுக்கொண்டு, 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, சுதந்திர தினத்தன்று, 11 பேரையும் விடுதலை செய்தது.
 
இந்த விடுதலையை எதிர்த்து, பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், குஜராத் அரசின் முடிவை ரத்து செய்து, 11 பேரையும் இரண்டு வாரங்களுக்குள் சிறையில் சரணடைய உத்தரவிட்டது.
 
இந்த உத்தரவை அடுத்து, 11 பேரும் நேற்று, கோத்ரா சிறையில் சரணடைந்தனர். அவர்களை சிறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 
Edited by Siva