1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 19 ஜனவரி 2024 (07:09 IST)

பில்கிஸ் பானு வழக்கு சரணடைய அவகாசம் கோரிய மனு: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை..!

Bilkis Bano
பில்கிஸ் பானு வழக்கு சரணடைய அவகாசம் கோரிய 3 பேரின் மனு  உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை வரவுள்ளது. பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய 11 பேரின் முன்கூட்டிய விடுதலையை உச்சநீதிமன்றம் சமீபத்தில் ரத்து  செய்தது. மேலும் 11 பேரையும் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் 3 பேர் காலஅவகாசம்  கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
 
கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் வன்முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பில்கிஸ் பானு குடும்பத்தினர் கொல்லப்பட்ட  வழக்கில் 11 பேர் தண்டனை பெற்ற நிலையில் அதன்பின் அவர்களை விடுதலை செய்வதாக குஜராத் நீதிமன்றம் அறிவித்து. ஆனால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
 
இந்த வழக்கில் 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது செல்லாது என தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் சரணடைய அவகாசம் கோரி குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
 
இந்த மனுவில், "எங்களுக்கு சட்ட ஆலோசனை பெற நேரம் தேவை என்றும், மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட காரணங்களால் எங்களுக்கு சரணடைய அவகாசம் வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.
 
சரணடைய ஜனவரி 21வரை மட்டுமே அவகாசம் இருப்பதால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் குற்றவாளிகள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ள நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
 
Edited by Siva