திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (22:12 IST)

முல்லை பெரியார் அணையில் விரிசலா? கேரள அரசின் எச்சரிக்கை அறிவிப்பு

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் முல்லை பெரியாறு அணை உள்பட கேரளாவில் உள்ள அனைத்து அணைகளும் கிட்டத்தட்ட முழு கொள்ளளவை எட்டிவிட்டது.
 
இந்த நிலையில் முல்லை பெரியார் அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தவறான தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுவதாகவும், இவ்வாறு வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கேரள அரசு அறிவித்துள்ளது.
 
குறிப்பாக வாட்ஸ் அப் தளத்தில் இதுபோன்ற வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும், அவ்வாறு வதந்திகள் பரப்புபவர்களின் விபரங்கள் சைபர் செல் மூலம் சேகரிக்கப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள அரசு அறிக்கை ஒன்றின் மூலம் எச்சரித்துள்ளது.