1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (09:53 IST)

கனமழை எதிரொலி - கேரளாவில் ஆகஸ்ட் 28-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கேரளாவில் பெய்து வரும் கன மழையின் காரணமாக ஆகஸ்ட் 28-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பெருமழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.  
 
முக்கியமாக மலை பகுதிகளான இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.  
 
மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களது வீடுகள், உடைமைகள் ஆகியவற்றை இழந்து முகாம்களில் தங்கி வருகின்றனர்.  கேரள மக்களுக்கு உதவும் வகையில், நாடெங்கும் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. 
 
கனமழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இதுவரை 100 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வரும் நாட்களில் கேரளாவில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக கேரளாவில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 28-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும், அனைத்து தேர்வுகளும் ரத்து  செய்யப்படுவதாகவும், தேர்வுகளுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது.