வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2024 (13:49 IST)

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய திமுகவினர்!

DMK
திமுக சார்பில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு இன்று பிறந்த 6 குழந்தைகளுக்குதங்க மோதிரம் வழங்கி கொண்டாட்டம்


 
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில்.தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிவகங்கை நகர் கழகத்தின் சார்பாக நகர செயலாளரும் நகரமன்ற தலைவருமான துரை. ஆனந்த் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளரும் காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவருமான  கே.எஸ்.எம் மணிமுத்து முன்னிலையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் இன்று பிறந்த ஆறு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மாவட்ட துணை செயலாளர்   மணிமுத்து ஏற்பாட்டில் தங்கமோதிரங்களை இன்று பிறந்த குழந்தைகளுக்கு  அணிவித்தார்.

பின்னர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது இதனை தொடர்ந்து பழமலை நகரில்  வசிக்கும் நரிகுறவவாழ் இன பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கபட்டது.

இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைதலைவர் கார்கண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள் வீனஸ் ராமநாதன், ஜெயகாந்தன், அயூப் கான், ராமதாஸ் ,மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.