வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 18 செப்டம்பர் 2024 (10:14 IST)

ஆண்டிபயாடிக் மருந்துகளால் 10 லட்சம் இந்தியர்கள் பலி? - அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு!

பள்ளி வரும் ஒவ்வொரு மாணவருக்கும் 20 மாத்திரைகள்

மருத்துவமனைகளில் பரிந்துரைக்கப்படும் ஆண்டி பயாடிக் மருந்துகளால் இந்தியாவில் பலர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியுள்ள லான்செட் ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இந்தியா முழுவதும் 150+ கோடி ஜனத்தொகை உள்ள நிலையில் அனைவருக்கும் அடிப்படையான மருத்துவ சேவைகள் கிடைப்பது பல பகுதிகளில் சிரமமான ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஆண்டிபயாடிக் மருந்துகளை அதிகளவில் உட்கொள்வதால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பலியாவதாக லான்செட் மருத்துவ ஆய்விதழ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

பொதுவாக காய்ச்சல், காயங்கள் தொடங்கி உடலின் பல்வேறு பாதிப்புகளுக்கும் ஏற்றவாறு வெவ்வேறு வகையான ஆண்டிபயாடிக் மருந்துகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. ஒருவருக்கு ஆண்டிபயாடிக் மருந்து தேவையா இல்லையா என்பதை அறிய நோயாளியின் ரத்தம், சிறுநீர் போன்றவற்றில் உள்ள கிருமிகளை ஆய்வு செய்து அதன்பின்னர் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் அனைத்து விதமான நோய்களுக்கும் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
 

 

மருத்துவமனைகளில் வழங்கப்படும் ஆண்டிபயாடிக் மருந்துகள் நோயாளியின் வயது, உடல் எடை, நோய் பாதிப்பின் தன்மை குறித்து மாறுபடும். அதனால் எவ்வளவு காலத்திற்கு அவர்கள் ஆண்டி பயாடிக் எடுக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் சரியாக அவர்களுக்கு விளக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்தகங்களில் ஆண்டிபயாடிக்குகளை வாங்கி பயன்படுத்துவது போன்றவையும் இதற்கு முக்கிய காரணியாக உள்ளது என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K