செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 டிசம்பர் 2020 (16:15 IST)

’போராட வந்த விவசாயி பலி’… தலைநகரில் பெரும் பரபரப்பு

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக இன்று 13 வது நாளாக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த 1 கோடிக்கும் அதிகமனான விவசாயிகள் தலைநகர் தில்லியில் போராடி வருகின்றனர்.

மத்திய அரசு விவசாய பிரதிநிதிகள் தலைவர்களுடன் மீண்டும் 5 வது முறையாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஹரியாணா மாநில சோனியத்தின் கோஹானாயில் வசித்து வந்த மூர் என்ற இளைஞர். வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று காலை திறந்தவெளி பூங்காவில் இளைஞர் மூர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார்  இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.