வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 9 ஜனவரி 2017 (12:55 IST)

மோடி ஒரு பிக்பாக்கெட்: கடுமையாய் தாக்கும் மார்க்சிஸ்ட்!!

பிக்பாக்கெட் அடிப்பது போல் மக்களிடம் இருந்து பணத்தை திருடி மோடி நலத்திட்டங்களை அறிவிக்கிறார் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடுமையாக விமர்சித்துள்ளார்.


 
 
கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் தங்களின் பணத்தை வெள்ளையாக மாற்ற மோடி உதவி செய்துள்ளார். ஆனால் அதற்குள் ரூபாய் நோட்டு தடை மத்திய அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று பாஜக கட்சி மார்தட்டி வருகிறது.
 
மேலும், பிரதமர் மோடி ஒரு பிக்பாக்கெட் திருடன் போல, மக்களிடம் உள்ள பணங்களை பிக்பாக்கெட் திருடன் போல எடுத்து மீண்டும் அவற்றை நலத்திட்டங்கள் என்ற பெயரில் மக்களிடமே திருப்பி தருகிறார் என்று கூறியுள்ளார். 
 
வெளிநாடுகளில் உள்ள கருப்புப்பணத்தை மீட்டு வருவேன் என்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த மோடி அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.