1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (16:10 IST)

கண்டித்த ஆசிரியரை 2 மாணவர்கள் சேர்ந்து கத்தி குத்து : ஆசிரியர் பலி

பள்ளிக்கு சரிவர வராமல் இருந்த மாணவனை ஆசிரியர் கண்டித்ததால், அம்மாணவன் தனது நண்பருடன் சேர்ந்து ஆசிரியரை கத்தியால் குத்தியதில், ஆசிரியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 

 
மேற்கு டெல்லி, நங்க்லோய் பகுதியில் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் ஹிந்தி ஆசிரியர் ஒருவரின் வகுப்பிற்கு சரியான வருகை தராததை அடுத்து, அந்த ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றொருக்கு தகவல் அனுப்பி உள்ளார்.
 
இந்நிலையில் பள்ளியில் திங்கள்கிழமை தேர்வு நடைபெற்றுள்ளது. பின்னர் தேர்வு முடிந்ததும், அந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன், தனது நண்பருடன் வகுப்பறையிலேயே சென்று ஹிந்தி ஆசிரியரை சராமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர்.
 
இதில் பலத்த காயமடைந்த ஆசிரியர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடி மாணவர்களை தேடி வருகின்றனர்.