ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By J.Durai
Last Modified: திங்கள், 26 பிப்ரவரி 2024 (09:12 IST)

ராணியை அழிக்கத் துடிக்கும் பாம்புகள்..! - "பாம்பாட்டம்" திரைவிமர்சனம்!

Pambattam
வைத்தியநாதன் பிலிம் கார்டன் சார்பில் வி.பழனிவேல் தயாரிப்பில் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ஜீவன் நடித்து வெளிவந்த திரைப்படம் "பாம்பாட்டம்"


 
இத் திரைப்படத்தில் சலில் அன்கோலா,ரமேஷ் கண்ணா,ஆண்ட்ரியா குருநாதன், லிவிங்ஸ்டன், கராத்தே ராஜா, ரிக்கின்,சரவணன், சக்தி சரவணன், ரித்திகா சென், மல்லிகா ஷெராவத், சுமன் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சுதந்திரத்திற்கு முன்னாள் ராணி மகாதேவி(மல்லிகா ஷெராவத்) தனது சமஸ்தானத்தை ஆட்சி செய்து வருகிறார்.

அந்த சமயத்தில் ஒரு ஜோதிடர் நீங்கள் பாம்பு கடித்து இறந்து விடுவீர்கள் என்று கூறுகிறார். இதனால் அந்த சமஸ்தானத்தில் உள்ள அனைத்து பாம்புகளையும் கொல்லுமாறு உத்தரவிடுகிறார் ராணி மகாதேவி(மல்லிகா ஷெராவத்)

அதிலிருந்து ஒரு பாம்பு தப்பித்து அவரை கொன்று விடுகிறது,மேலும் ராணி மகா தேவியின் மகளுக்கும் இதே ஆபத்து உள்ளது என்று ஜோதிடர்  கூறுகிறார். இதனால் அவர்கள் ஊரை விட்டு வெளிதேசத்திற்கு செல்கின்றனர்

அதன் பின்பு ராணியின் ஆவி அந்த அரண்மனையை சுற்றி வருவதாக ஊர் முழுக்க பேசப்படுகிறது. இந்நிலையில் இதனை விசாரிக்க போலீஸ் அதிகாரியான ஜீவன் வருகிறார்.

இதன் பின்பு அரண்மனையின் ஆவி இருந்ததா? பாம்பு இருந்ததா?யாரையும் பழி வாங்கியதா? இல்லையா ? இதுதான் படத்தின் கதை. ஜீவன் அப்பா மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளார்

ராணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள மல்லிகா ஷெராவத் சிறப்பான  நடிப்பை கொடுத்துள்ளார். சுமன்,ரித்திகா சென், லிவிங்ஸ்டன், சக்தி சரவணன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கேற்றார் போல சிறப்பாக நடித்துள்ளனர்

அம்ரிஷ்  பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். மொத்தத்தில்" பாம்பாட்டம்" உயிரோட்டம்