ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 22 பிப்ரவரி 2024 (12:22 IST)

விளையாட்டில் சாதிக்க துடிக்கும் கிராமத்து பெண்ணின் கதை! - "எட்டும் வரை எட்டு" திரை விமர்சனம்!

Ettum Varai Ettu
ஹேமா மூவிஸ் இண்டர்நேஷ்னல் என்.என். மணிபாலன் சார்பில் எஸ்.பாஸ்கர் தயாரித்து  வேல்விஸ்வா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்"எட்டும் வரை எட்டு"


 
இத் திரைப்படத்தில் எஸ்.பாஸ்கர், நந்தகுமார், பிரத்யங்கிரா ரோஸ், செளந்தர்யா வரதா, ஆடுகளம் நரேன், சீனி பாட்டி, ஆர்த்தி, முத்துக்காளை, வெங்கல் ராவ், கிங்காங், ஜெயகுமார்,கிரேன் மனோகர்,நாகராஜ் சோழன்,சுசி, எஸ்.பாஸ்கர், என்.ஆர்.தனபாலன் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்

தன் தாயின் முகம் பார்க்காமல் ஒரு சிறிய குக்கிராமத்தில் பிறந்தவள் பூமணி. பூ மணிக்கு விளையாட்டு துறையில் ஆர்வம் அதிகம் நன்கு ஒடுவாள்,இதனால் உலக அளவில் ரன்னிங்கில் வெற்றி பெற்று சாதிக்க வேண்டும் என்பதே இவளது இலட்சியம். இதற்கு பூமணி  தந்தை தங்க வேலு அந்த காலத்து  மனிதர் என்பதால் தடை விதிக்கிறார்

இநநிலையில் பூமணி ஒரு கொலை குற்றத்திலும் சிக்கி கொள்கிறாள். இந்த கொலை குற்றத்தில் இருந்து தப்பித்தாரா? பல தடைகளை மீறி தனது இலட்சியத்தை அடைந்தாளா? என்பது தான்  படத்தின் மீதி கதை

கிராமத்தில் வசிக்கும் பெண்கள் திறமை இருந்தும் சாதிக்க முடியாமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் குடும்பத்தினரே  என்பதை அழுத்தமாக  பேசி இருக்கிறார் இயக்குனர்  வேல்விஸ்வா

கதையின் நாயகியாக நடித்திருக்கும் பிரத்யங்கிரா ரோஸ், தனது  கதாபாத்திரத்திற் கேற்றார் போல சிறப்பாக நடித்துள்ளார்

 
நாயகன் நந்தகுமாரும் சிறப்பாக நடித்துள்ளார். ‘ஆடுகளம்’ நரேன்,  நடிப்பு தான் ஒரு நடிகன் என்பதை நிருபித்து விட்டார்

ஆர்த்தி, முத்துக்காளை, வெங்கல் ராவ், கிங்காங், ஜெயகுமார்,கிரேன் மனோகர், நாகராஜ சோழன், சுசி, எஸ்.பாஸ்கர், என்.ஆர்.தன்பாலன் போன்றோர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக நடித்துள்ளார்கள். அதுமட்டுமின்றி பார்வையாளர்களை அவ்வப்போது சிரிக்கவும் வைக்கின்றனர்

ராஜயோகி இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பு. படத்திற்கு பின்னணி இசை அருமை. வேல் முருகனின் கேமரா கண்கள் வறண்டு போன கிராமத்தை  இயல்பாக காட்சிப்படுத்தியுள்ளது

 மொத்தத்தில் "எட்டும் வரை எட்டு" குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்