திங்கள், 20 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2024 (10:05 IST)

"மகாராஜா"திரை விமர்சனம்!

ஜெகதீஷ் பழனிச்சாமி,சுதன் சுந்தரம் ஆகியோர்களது தயாரிப்பில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கி விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் "மகாராஜா"
 
இத்திரைப்படத்தில் அனுராக் காஷ்யப்,மம்தா மோகன் தாஸ்,நட்டி, அபிராமி,
முனீஸ்காந்த், அருள்தாஸ்,சிங்கம் புலி,வினோத் சாகர் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 
படத்தின் நாயகன் மகாராஜா(விஜய் சேதுபதி)தன் வீட்டில் வைத்திருந்த லட்சுமி காணாமல் போனதாகப் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். 
 
காவல் அதிகாரிகளிலிருந்து கைதாகி காவல் நிலையத்தில் இருக்கும் திருடன் வரை அனைவரும்  எந்த லட்சுமி காணாமல் போனது என்று கேட்கிறார்கள்.
 
மகாராஜா தான் தொலைத்த அந்தப் பொருளைப் பற்றிச் சொல்கிறார்.
 
அதைக்கேட்டு மொத்த காவல்நிலையமுமே கோபமடைகிறது. மகாராஜாவை அடித்துவிரட்டுகிறார்கள். 
 
ஒருகட்டத்தில், காவல் ஆய்வாளரிடம் என் பொருளைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.5 லட்சம் தருவதாகக் கூறுகிறார். 
 
ஐநூறு ரூபாய் விலைகூட இல்லாத திருட்டு போன பொருளை இவ்வளவு தொகை கொடுத்து மீட்க இவன் ஏன் போராடுகிறான் என காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர். திருடுபோன பொருளுக்குள் வேறு ஏதோ இருக்கிறது என காவல்துறை அப்பொருளை மீட்க தீவிரம் காட்டுகின்றனர்.
 
திருடுபோன லட்சுமி என்ன? சாதாரண பொருளுக்காக ஏன் மகாராஜா இவ்வளவு போராட வேண்டும்? என்பதே படத்தின் மீதி கதை.
 
அடுத்தடுத்த காட்சிகளில் என்னவாக இருக்கும் என்று பார்வையாளர்கள் யூகிக்க முடியாமல் காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குனர் நித்திலன்.
 
கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு  மகாராஜா  50-வது திரைப்படமான மகாராஜா
காதில் வெட்டுக்காயத்துடன் நரைதாடியுடன் பழிவாங்கத் துடிக்கும் வெறியை தன் அனுபவ நடிப்பால் அசத்தியுள்ளார்.
 
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனுராக் காஷ்யப் இப்படத்திற்கு முக்கிய பங்கு வகித்துள்ளார்.
 
நடிகர்கள்  நட்டி,முனிஷ்காந்த், சிங்கம் புலி,அபிராமி விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சஜனா நெமிதாஸ் ஆகியோர்கள் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்துள்ளனர்.
 
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், எடிட்டர் பிலோமின் ராஜ் என ஒட்டுமொத்த படக்குழுவும் தங்களது உழைப்பை திரையில் கொடுத்துள்ளனர்.
 
 மொத்தத்தில் "மகாராஜா" திரைப்படம் குடும்பத்துடன் திரையில் சென்று பார்க்க வேண்டிய படம்