1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By J.Durai
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2024 (13:33 IST)

"கள்வன்"திரை விமர்சனம்!

டில்லி பாபு தயாரித்து பி.வி.ஷங்கர்  இயக்கத்தில் வெளி வந்த திரைப்படம்"கள்வன்"
 
இத்திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், பாரதிராஜா, இவானா, தீணா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். 
 
வனப்பகுதியை ஒட்டியுள்ள, யானைகள் அடிக்கடி வந்து போகும் ஆபத்துமிக்க  கிராமத்தில் வசித்து வரும் நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார், தனது நண்பர் தீனா வுடன் சேர்ந்து திருடுவது,மது அருந்துவது என்று வாழ்ந்து வருகிறார்.
 
இதற்கிடையே நாயகி இவானாவை சந்திக்கிறார் அவர் மீது காதல் வயப்படுகிறார்.
 
ஆனால், ஜி.வி-யின் காதலை இவான நிராகரிக்க, அவரை விடாமல் துரத்தி அவருக்காக ஆதரவற்ற முதியவர் இல்லத்தில் இருக்கும் பாரதிராஜாவை தத்தெடுக்கிறார். 
 
காதலுக்காக தான் ஆதரவற்ற முதியவரை ஜி.வி.பிரகாஷ் குமார் தத்தெடுத்தார், என்று அவரது நண்பர் நினைக்கும் போது. தத்தெடுப்புக்கு பின்னணியில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் வேறு ஒரு திட்டம் பற்றி தெரிய வருகிறது. 
 
அந்த திட்டம்  என்ன? , அவரது திட்டமும், காதலும் நிறைவேறியதா? என்பது  தான் படத்தின் மீதி கதை.
 
காதல்,காமெடி, துரோகம்,செண்டி மெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாகவும் சிறுவர்களுக்கு பிடிக்கும் வகையில் யானையையும் காட்டி அனைத்து தரப்பினரையும் ஈர்த்துள்ளார் இயக்குனர் பி.வி.ஷங்கர்
 
பாராதிராஜாவை வைத்து போடும் திட்டத்தால் தனது எதார்த்தமான நடிப்பையும் தனது காதலை இவனா நிராகரிக்கும் போது வரும் காட்சிகளில் கலங்கி நிற்கும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அசத்தியுள்ளார்.
 
கெம்பன் என்ற கதாபாத்திரமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்
 
நாயகி இவானா, தனது சிரித்த முகம் கோபமான முகம் என்று இரண்டையும் காட்டி ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார்.
 
ஜி.வி.பிரகாஷ் தாத்தாவாக  தனிமையின் தவிப்பு பற்றி வருந்தும் காட்சியில், தனது நடிப்பால் பார்வையாளர்களை கண் கலங்க வைத்து விட்டார்  பாரதிராஜா.
 
தீனா  வரும் காட்சிகளில் அவ்வபோது பார்வையாளர்களை சிரிக்க வைத்துள்ளர்.
 
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பு. 
 
ரேவாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
 
வனப்பகுதி,காடு, யானை  மற்றும் இயற்கை சூழ்ந்த இடங்களை அழகாக படம் பிடித்துள்ளது பி.வி.சங்கர் கேமரா கண்கள். 
 
மொத்தத்தில்  "கள்வன்"  குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்