1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: சனி, 30 மார்ச் 2024 (12:46 IST)

"ஹாட் ஸ்பாட்" திரை விமர்சனம்

கோகுல் பெனாய் தயாரித்து விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் "ஹாட் ஸ்பாட் "
 
இத் திரைப்படத்தில் கலையரசன்,சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி,கௌரி கிஷன்,ஜனனி ஐயர் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். 
 
படத்தில் மொத்தம் 4 கதைகளை உருவாக்கி அதை தயாரிப்பாளர் ஒருவரிடம்  திரைக்கதையை கூறி நம் கண் முன்னே காட்சிப்படுத்தியுள்ளார் விக்னேஷ் கார்த்தி
 
முதல் கதையில் ஆதித்யா பாஸ்கரும், கௌரி கிஷனும்  நடித்திருக்கிறார்கள். இருவரும் காதலர்களாக இருக்க காலம் மாறிய நிலையில் பெண் ஆணுக்கு தாலி கட்டப் போய் என்ன நடந்தது என்ற நிகழ்வுகளாக நகர்கிறது கதை.
 
இரண்டாவது கதை சாண்டி மாஸ்டரும், அம்மு அபிராமியும் காதலர்களாக காட்டப்படுகிறது. முடிவில் அவர்கள் இருவரும் அண்ணன் தங்கை உறவு என்று அந்த கதை அத்துடன் முடிவு பெறுகிறது.
 
மூன்றாவது கதை சுபாஷ் செல்வம் அலுவலக டாய்லெட்டிலேயே சுய இன்பம் செய்து  வெளியே தெரிந்த காரணத்தால் வேலை பறிபோக, தொடர்ந்து வேலையில்லாத காரணத்தால்  ஆண் விபச்சாரி ஆகிறார். 
 
ஒரு கட்டத்தில் தனது காதலியான ஜனனிக்கு இது தெரியவர
ஜனனியுடன் இருந்த அவரது  காதல் என்ன ஆனது அதற்கு ஜனனி என்ன செய்தார்  என்று ஒரு வழியாக  அந்த கதை  முடிகிறது.
 
நான்காவது கதை பணத்திற்கு ஆசைப்பட்டு குழந்தைகளை டிவி ஷோக்களுக்கு அனுப்புவதும் அதனால்  சிறுவர் சிறுமிகள் மனநிலையும் உடல் நிலையும் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது.
என்பதை பேசியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்தி
 
படத்தின் காட்சிகளுக்கு ஏற்றவாறு  வித்யாசமான இரண்டு பாடல்களை இசையமைத்திருக்கிறார்
சதீஷ் ரகுநாதன்.
 
மொத்தத்தில் "ஹாட்ஸ் பாட்"2 கே கிட்ஸ் பார்க்க வேண்டிய படம்