வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 28 மார்ச் 2024 (07:27 IST)

ஸ்டார் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் கவனிக்கப்படும் ஒரு நடிகராகியுள்ளார். இப்போது அவர் நான்குக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் ஸ்டார் படத்தை டாடா கவின் நடிப்பில் உருவாக்கி வருகிறார் இயக்குனர் இளன்.

இந்த படத்தை நித்தம் ஒரு வானம் படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் பணிகள் நிறைவடையாத காரணத்தால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இன்னும் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

சமீபத்தில் ஷூட்டிங்கை முடித்த இந்த படக்குழுவினர் தற்போது முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். படத்தில் தனது காட்சிகளுக்கான டப்பிங்கை முடித்துள்ளார் கவின். இதனால் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்து படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.