1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Updated : வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (19:31 IST)

கலகலப்பு 2 - திரை விமர்சனம்

சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், சிவா ஆகியோர் நடிப்பில் கலகலப்பு 2 இன்று வெளியாகியுள்ளது.

 
சுந்தர்.சி படம் தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகள் கொண்ட படத்தையே எடுத்து வருகிறார். ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் இரண்டாகம் வெளியாவது தற்போது தமிழ் சினிமாவில் ஒரு கலாச்சாரமாக மாறியுள்ளது. அந்த வகையில் கலகலப்பு திரைப்படம் வெற்றி பெற அதன் இரண்டாகம் பாகம் கலகலப்பு 2 இன்று வெளியாகியுள்ளது.
 
காசியில் மேன்ஷன் நடத்தி வருகின்றார் ஜீவா. அந்த மேன்ஷனுக்கு சொந்தக்காரரான ஜெய் மேன்ஷனை விற்க காசி வருகிறார். ஜீவா, ஜெய் இருவரும் சேர்ந்து மேன்ஷனை நடத்த முடிவு செய்கின்றனர். சிவா இவர்களிடம் இருந்து பணத்தை திருடுகிறார். இதையடுத்து ஜீவாவும், ஜெய்யும் சேர்ந்து சிவாவை தேடி செல்கின்றனர். அதன்பின் நடக்கும் கலகலப்பான சம்பவங்கள் கலகலப்பு 2வின் மீதிக்கதை.
 
ஆக்‌ஷன் ஹீரோ ஜீவா, எமோஷ்னல் ஹீரோ ஜெய், ஜாலி ஹீரோ சிவா, பிராட் மைண்டட் ஹீரோயின் கெத்ரீன் தெரசா, இன்னோசண்ட் ஹீரோயின் நிக்கி கல்ராணி, போலி சாமியார் யோகி பாபு, எக்ஸ்சலெண்ட் ஹீரோயின் பிரதர் சதீஷ், ஹீரோயின் ஃபாதர் விடிவி கணேஷ், எக்ஸ் இன்ஸ்பெக்டர் ராதாரவி, குட்டி வில்லன் ரோபோ ஷங்கர், அமெரிக்கன் ரிட்டன் மனோ பாலா என நடிகர்கள் பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.
 
படத்தின் முதல் பாகத்தில் பாடல்கள் அடுத்தடுத்து வந்து இம்சை கொடுத்தாலும் படத்தின் கதாபாத்திரங்கள், எல்லோருமே போட்டி போட்டுக்கொண்டு சிரிக்க வைக்கின்றனர். 
 
கலகலப்பு 2 கண்டிப்பாக பார்பவர்களை தியேட்டரில் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்.