வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 22 ஜூலை 2021 (20:33 IST)

இதைத்தான் நான் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன்: டாக்டர் ராமதாஸ்

இதைத்தான் நான் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் 
 
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் குட்கா விற்பனையை தடுக்க நாளை முதல் தீவிர பரிசோதனைகள் செய்யப்படும் என்று செய்தியாளர்கள் மத்தியில் இன்று பேட்டி அளித்த போது கூறினார்
 
இந்த அறிவிப்புக்கு வரவேற்பு கொடுத்துள்ள டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: குட்கா விற்பனையை தடுக்க நாளை முதல் தீவிர சோதனைகள் நடத்தப்படும் என்று மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருக்கிறார் . இது மிகவும் சரியான நடவடிக்கை. இதைத்தான் நான் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். குட்கா இல்லாத தமிழகம் வேண்டும்