புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By siva
Last Updated : புதன், 5 மே 2021 (07:44 IST)

துணை முதல்வர் பதவி கேட்கும் பாஜக: புதுவையில் பரபரப்பு

புதுவையில் நடைபெற்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாளில் என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
 
இந்த நிலையில் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான பாஜக தற்போது துணை முதல்வர் உள்பட முக்கிய இரண்டு அமைச்சர் பதவிகளையும் கேட்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 
புதுவையில் பாஜக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்று பதவிகள் தங்களுக்கு வேண்டும் என்றும் அதில் ஒன்று துணை முதல்வர் பதவி என்றும் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு என் ஆர் காங்கிரஸ் தரப்பிலிருந்து ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
 
ஏற்கனவே என் ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேர் அமைச்சர்களாக ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது பாஜகவில் இருந்தும் துணை முதல்வர் உள்பட 2 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்று கூறப்பட்டு வருகிறது.