புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 4 மே 2021 (17:48 IST)

மூத்த அரசியல் தலைவர்களை வரிசையாக சந்திக்கும் உதயநிதி: என்ன காரணம்?

மூத்த அரசியல் தலைவர்களை வரிசையாக சந்திக்கும் உதயநிதி: என்ன காரணம்?
திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் ஸ்டாலினின் மகனும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் வரிசையாக மூத்த அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழர் திராவிட இயக்கத் தலைவர் சுபவீரபாண்டியன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியவர்களை உதயநிதி நேரில் சந்தித்து அவர்களுக்கு மரியாதை செலுத்தி வருகிறார் 
 
இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். முதல் முறையாக தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து அவர் மூத்த அரசியல் வாதிகளிடம் ஆசி பெற்று வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்க இருப்பதாகவும் அவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது குறித்து எந்த விதத்திலும் எதிர்ப்பு எழுந்து விடக்கூடாது என்பதற்காகவே முன்கூட்டியே அவர் மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து வருவதாகவும் ஒரு செய்தி இணையதளங்களில் பரவி வருகிறது