புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 13 பிப்ரவரி 2021 (14:20 IST)

விஜய் தேவரகொண்டாவின் "LIGER" திரைமுன்னோட்டம்!

ப்ளாக்பஸ்டர் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில்,இளம் நாயகன் விஜய் தேவரகொண்டாவுடைய முதல் பன்மொழி திரைப்படமாக உருவாகும் LIGER ( saala Crossbreed ) மிகப்பெரும் எதிர்பார்ப்பிற்குரிய  திரைப்படமாக உருவாகிவருகிறது.
 
Puri connects நிறுவனம் இந்த பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படத்தினை பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து தயாரிக்கிறது. liger படத்தின் அடுத்தகட்ட  படப்பிடிப்பு பணிகள் இன்று துவக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வியாழன்று படக்குழுவினர் படத்தின் திரையரங்கு வெளியீட்டு தேதியை அறிவித்தனர் என்பது குறிப்பிடதக்கது.
 
பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படமான Liger வருகிற செப்டம்பர் 9 அன்று வெளியாகிறது. அறிவிப்பு போஸ்டரில் விஜய் தேவரகொண்டா கையில் ஒரு தடியுடன், மிக வித்தியாசமான தோற்றத்தில் அழுத்தாமான பார்வையுடன் காட்சி தருகிறார்.
 
பாக்ஸிங் ரிங்கில் ஒருவருடன் சண்டையிடுகிறார் விஜய் தேவரகொண்டா பின்னணியில் பார்வையாளர்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். இப்படத்தில் விஜய் தேவரகொண்டா முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் தோன்றுவதோடு, இப்படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியும் மேற்கொண்டுள்ளார்.
 
தனது நாயகர்களை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்டும் திறமை கொண்ட இயக்குநர் பூரி ஜெகன்நாத் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவை மிகவும் வித்தியாசமான,  இதுவரை கண்டிராத தோற்றத்தில் காட்டியுள்ளார். விஜய் தேவரகொண்டா இதுவரையிலும் இருந்ததை விட மிக அழகான தோற்றத்தில் இருக்கிறார்.
 
போஸ்டர் போலவே Liger மிகப்பெரும் ஆக்சன் கமர்ஷியல் படமாக உருவாகிவருகிறது. பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கிறார். இந்தியளவில் பன்மொழி திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை Puri connects மற்றும் Dharma Productions நிறுவனங்கள் இணைந்து மிகப்பெரும் பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமான படைப்பாக உருவாக்குகின்றனர்.
 
மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்கள். Liger படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.