செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By siva
Last Modified: செவ்வாய், 26 ஜனவரி 2021 (19:31 IST)

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை தயாரிக்கும் லைகா: அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்த முறையான அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்றும் லைகா நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது 
 
ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் உள்பட பல மாஸ் நடிகர்களின் படங்களை தயாரித்த நிறுவனம் லைக்கா நிறுவனம். தற்போது பல கோடி ரூபாய் பொருட்செலவில் பொன்னியின் செல்வன் என்ற படத்தை தயாரித்து வருகிறது என்பதும் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்கு இந்த படம் குறித்த விரிவான அறிவிப்புகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது