டபுள் ஆக்ஷனில் விஜய்சேதுபதி - சங்கத்தமிழன் முன்னோட்டம்!

papiksha| Last Updated: வியாழன், 14 நவம்பர் 2019 (16:13 IST)
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் நாளை வெளியாகவுள்ள திரைப்படம் சங்கத் தமிழன். முதல் முறையாக விஜய் சேதுபதி இப்படத்தில்  சங்கமித்ரன் மற்றும் தமிழரசன் என டபுள் ரோலில் நடித்துள்ளார்.

விவசாயம், ஆக்‌ஷன், காதல் , குடும்பம்  என தன்னை அமசங்களையும் உள்ளடக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து நாசர், அனன்யா, சூரி, மைம் கோபி, கயல் தேவராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
கடந்த தீபாவளி தினத்தில் விஜய்யின் பிகில் படத்துடன் மோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது . நாளை விஷால் நடித்துள்ள ஆக்‌ஷன் திரைப்படத்துடன் சங்கத்தமிழன் மோதுகிறது. கிராமத்து விவசாயி தமிழரசனுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜூம் கிராமத்து பெண் வேடத்தில் சங்கமித்ரனுக்கு ஜோடியாக ராஷி கண்ணா கொஞ்சம் மாடர்ன் ரோலிலும் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கிறதென்பதை நாளை பார்க்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :