செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By
Last Updated : திங்கள், 11 மே 2020 (11:21 IST)

600ஐ தாண்டியது ராயபுரம்-கோடம்பாக்கம்: இன்றைய சென்னை கொரோனா நிலவரம்

சென்னையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று சென்னையில் பரவி இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
இந்த நிலையில் சென்னையில் எந்தெந்த பகுதியில் கொரோனா தொற்று அதிகம் என்பது குறித்த தகவல்களை சற்று முன்னர் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில் நேற்று முதல் மீண்டும் முதலிடம் பிடித்த ராயபுரம் இன்றும் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.  ராயபுரத்தை அடுத்து கோடம்பாக்கம் மற்றும் திருவிக நகர் உள்ளது. ராயபுரம், கோடம்பாக்கம், திருவிக நகர் ஆகிய மூன்று மண்டலங்களும் மாறி மாறி முதலிடத்தை பிடித்து வருவது பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி ராயபுரத்தில் 676 பேர்களுக்கும் கோடம்பாக்கத்தில் 630 பேர்களுக்கும் திருவிக நகரில் 556 பேர்களுக்கும் கொரோனா தாக்கியுள்ளது. மேலும் தேனாம்பேட்டையில் 412 பேர்களுக்கும் அண்ணாநகரில் 310 பேர்களுக்கும் வளசரவாக்கத்தில் 319 பேர்களுக்கும் அம்பத்தூரில் 275 பேர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது