தொடர்புடைய செய்திகள்
- இங்கிலாந்தில் குடியுரிமை.. இந்தியாவில் அரசு வேலை.. பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு.. அதிர்ச்சி தகவல்..!
- ராபிடோ ஓட்டுநர் கணக்கில் ரூ.331 கோடி பரிவர்த்தனை நடந்தது எப்படி: அமலாக்கத்துறை விசாரணையில் அதிர்ச்சி உண்மை..!
- போலீசாருக்கு ரூ.50 லட்சம் கொடுத்தாரா நடிகர் ஸ்ரீகாந்த்? அமலாக்கத்துறை விசாரணை..!
- நான் விளம்பரம் செய்தது கேமிங் செயலிகளுக்கு மட்டுமே.. அமலாக்கத்துறை விசாரணைக்கு பின் விஜய் தேவரகொண்டா பேட்டி..
- டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை! - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தவறு செய்தவர்களை ஐயப்பன் சும்மா விட மாட்டார்.. நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் ஜெயராம் பேட்டி..!
சபரிமலை கோயில் தங்கம் திருட்டு தொடர்பான வழக்கில், பிரபல மலையாள நடிகர் ஜெயராம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் என்பவருடன் ஜெயராமுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், ஏற்கனவே சென்னை மற்றும் கேரளாவில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவரிடம் மீண்டும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிந்து வெளியே வந்த ஜெயராம் செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேசினார். தான் ஒரு தீவிர ஐயப்ப பக்தன் என்று குறிப்பிட்ட அவர், "சபரிமலை விவகாரத்தில் ஊழல் நடந்திருந்தால், அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது ஒவ்வொரு மலையாளியின் கடமை. உண்மை வெளியே வருவதில் எனக்கு மகிழ்ச்சியே. தவறு செய்த யாரையும் ஐயப்பன் சும்மா விட மாட்டார்" என்று தெரிவித்தார்.
தங்கம் திருட்டு புகாரில் ஒரு முன்னணி நடிகர் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவதும், அவர் ஐயப்பனை முன்னிறுத்தி பதிலளித்திருப்பதும் கேரள அரசியலிலும் திரையுலகிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
